தமிழ்நாடு செய்திகள்
சட்டசபைக்கு 'கிட்னிகள் ஜாக்கிரதை' ஸ்டிக்கர் அணிந்து வந்த அ.தி.மு.க.வினர்
- சட்டசபையின் 3-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
- அ.தி.மு.க.வினர் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையின் 3-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.
நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டைகளில் 'கிட்னிகள் ஜாக்கிரதை' என்ற ஸ்டிக்கர் அணிந்து வந்துள்ளனர். அ.தி.மு.க.வினர் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
வினாக்கள் - விடைகள் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.