தமிழ்நாடு

கோவில் திருவிழா ஊர்வலம்- கூட்டத்திற்குள் புகுந்த லாரி மோதி 2 பேர் பலி

Update: 2022-08-15 04:23 GMT
  • மினிவேனில் சாமி சப்பரத்தை வைத்து ஊர்வலமாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக பின் தொடர்ந்து வந்தனர்.
  • பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த லாரி சாமி சப்பரம் ஏற்றி வந்த மினிவேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி பகுதியில் பச்சைஅம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

நேற்று மினிவேனில் சாமி சப்பரத்தை வைத்து ஊர்வலமாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக பின் தொடர்ந்து வந்தனர்.

அப்போது மெயின்ரோட்டில் வந்தபோது பின்னால் வந்த லாரி பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து சாமி சப்பரம் ஏற்றி வந்த மினிவேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் முருகன், செந்தில், வள்ளியம்மாள், சீனிவாசன், கோவிந்தம்மாள், சுப்பிரமணி, பவன் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கோவிந்தம்மாள், சுப்பிரமணி ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News