தமிழ்நாடு

கார் டிரைவருடன் இளம்பெண் தனிமையில் இருந்ததை நோட்டமிட்டு கற்பழித்த 6 பேர் கும்பல்

Update: 2022-08-10 07:17 GMT
  • இளம்பெண் தினசரி டீ கடைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை கார் மூலம் வீடு திரும்புவது வழக்கம்.
  • கார் டிரைவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

போரூர்:

மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே காரில் சென்ற இளம்பெண்ணை 6 பேர் கும்பல் கடத்தி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் அணிந்து இருந்த 8 பவுன் நகையும் கொள்ளை போனது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பன் தாங்கலை சேர்ந்த சூர்யா, கருப்பையா, தினேஷ், சுரேஷ், சந்தோஷ், ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் கார் டிரைவருடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததை நோட்டமிட்டு 6 வாலிபர்களும் அவரை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்து இருப்பது தற்போது தெரியவந்து உள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கணவருடன் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். அவர்கள் போரூர் சுங்கச்சாவடி அருகே டீ கடை நடத்தி வருகின்றனர். இளம்பெண் தினசரி டீ கடைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை கார் மூலம் வீடு திரும்புவது வழக்கம். அப்போது கார் டிரைவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இரவு 11மணி அளவில் அந்த பெண் வழக்கம் போல் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கொளுந்துவாஞ்சேரி பகுதியில் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு டிரைவருடன் தனிமையில் நெருக்கமாக இருந்து உள்ளார்.

இதை கண்ட அங்கு வந்த வாலிபர் ஒருவர் "நீங்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்" என்று கேட்டு உள்ளார். அப்போது "நானும் இந்த ஏரியா தான் கிளம்பி போ" என்று இளம்பெண் கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரத்தில் இளம்பெண் திடீரென அந்த வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் உடனடியாக தனது நண்பர்கள் 5 பேரை போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்து உள்ளார். அவர்கள் கார் டிரைவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டிவிட்டு பின்னர் கத்தி முனையில் இளம்பெண்ணை மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்று உள்ளனர்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்து அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளையும் பறித்து தப்பி சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான தனிப்படை போலீசார் சூர்யா உள்ளிட்ட 6பேர் கும்பலை கைது செய்து உள்ளனர்.

அவர்கள் மீது கற்பழிப்பு, கூட்டுக் கொள்ளை, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News