தமிழ்நாடு

மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி கூட்டம்

Update: 2022-06-28 07:55 GMT
  • முதல் கூட்டம் ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
  • மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.

சென்னை:

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஸ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

முதல் பெண் மேயராக பிரியா பதவியேற்ற பிறகு அவர் தலைமையில் நடந்த 3-வது மாமன்ற கூட்டம் இது.

முதல் கூட்டம் ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும்.

ஏற்கனவே அனைத்து மண்டல குழுக்களுக்கும் மேயர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், 'ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதிக்குள் மண்டல கூட்டங்களை நடத்தி முடித்து தீர்மானங்களை மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மண்டல குழுக்களில் முன் வைக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே பணிகள் தேர்வு செய்யப்பட்டு மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News