தமிழ்நாடு செய்திகள்

குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்

Published On 2023-01-15 15:18 IST   |   Update On 2023-01-15 15:27:00 IST
  • தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார்.

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் களை கட்டியுள்ளது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார்.

Tags:    

Similar News