தமிழ்நாடு

திருவொற்றியூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் கல் வீச்சு

Update: 2022-10-05 09:03 GMT
  • திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் வசித்து வருபவர் ரவி.
  • போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் வசித்து வருபவர் ரவி.இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருவொற்றியூர் கிழக்கு பகுதி மண்டல தலைவராக உள்ளார். நேற்று இரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News