தமிழ்நாடு

குட்கா விற்பனை செய்யப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.


மணலியில் குட்கா விற்பனை செய்யப்பட்ட குளிர்பான கடைக்கு சீல்- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Published On 2022-08-13 09:35 GMT   |   Update On 2022-08-13 09:35 GMT
  • குளிர்பான கடையில் குட்கா விற்பனை செய்வது பற்றி தகவல் கிடைத்தது.
  • போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சென்னை:

தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடைகள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட இடங்களில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் செங்குன்றம் துணை கமிஷனர் மணிவண்ணன் போதை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி மணலியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட குளிர்பான கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மணலி ஆண்டார் குப்பத்தில் பொன்னேரி நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் குளிர்பான கடையில் குட்கா விற்பனை செய்வது பற்றி தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அங்கிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உதவி கமிஷனர் தட்சிணா மூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோரது முன்னிலையில் நகராட்சி அதிகாரி பால் மற்றும் அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

Similar News