தமிழ்நாடு

சசிகலாவின் அடுத்த இலக்கு- சட்டசபை தொகுதி வாரியாக செல்ல தயாராகிறார்

Published On 2022-06-28 05:45 GMT   |   Update On 2022-06-28 10:22 GMT
  • அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
  • அ.தி.மு.க.வுக்கு மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. தலைமை பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கி உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியாக உள்ளார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சசிகலாவும் அ.தி.மு.க. தலைமை பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த சசிகலா, அ.தி.மு.க. தலைமை பதவிக்கு வரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள் என கூறினார்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சட்டமன்ற தொகுதி வாரியாக தனது அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை தீவிரப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார். கரூரில் இருந்து சசிகலா இந்த பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் கரூருக்கு செல்லும் சசிகலா, அடுத்தடுத்த நாட்களில் சுற்றுப் பயணத்தை வேகப்படுத்தி ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் நிச்சயமாக இழுக்க முடியும் என்று சசிகலா நம்புவதாக அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News