தமிழ்நாடு

சுதந்திர தின விடுமுறையில் சென்னை மண்டலத்தில் ரூ.56 கோடிக்கு மது விற்பனை

Published On 2022-08-16 05:43 GMT   |   Update On 2022-08-16 05:43 GMT
  • தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மது விற்பனை ரூ.275 கோடியை தாண்டியது.
  • சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.56 கோடிக்கு அதிகமாக மது விற்பனையாகி இருந்தது.

சென்னை:

தமிழக அரசுக்கு அதிகமான வருமானம் ஈட்டித்தரும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் செயல்படுகிறது.

டாஸ்மாக் சில்லறை கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.100 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகின்றன.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ பண்டி கை நாட்களில் மது விற்பனை மேலும் அதிகரிப்பது வழக்கம்.

அந்த வகையில் சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றும் பொது விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட பலர் வெளி இடங்களுக்கு சென்று வந்தனர்.

நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது குடிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் மது வாங்கி சென்றனர். இதனால் பல கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை ஒருநாளில் மது விற்பனை ரூ.275 கோடியை தாண்டியது. இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.56 கோடிக்கு அதிகமாக மது விற்பனையாகி இருந்தது.

மதுரை மண்டலத்தில் ரூ.58 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.54 கோடிக்கும், சேலத்தில் ரூ.55 கோடிக்கும், கோவையில் ரூ.52 கோடிக்கும் மதுபான வகைகள் விற்பனையாகி இருந்தது.

Tags:    

Similar News