தமிழ்நாடு

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது: பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2022-08-15 06:45 GMT   |   Update On 2022-08-15 06:45 GMT
  • அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களால் அதை விலை கொடுத்து வாங்க முடியாது.
  • அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் தடைபட்ட, அரசு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பிறகும் இன்று வரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இன்றைய கல்விச் சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மிகவும் அவசியமானவை. ஆனால், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களால் அதை விலை கொடுத்து வாங்க முடியாது. அந்த வகையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது சிறப்பான திட்டம்.

மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News