தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் பெயரை விரும்பிய வண்ணங்களில் எழுதிக் கொள்ளலாம்

Published On 2023-03-10 11:41 IST   |   Update On 2023-03-10 17:38:00 IST
  • மெட்ரோ ரெயில் நிலையத்தின் பெயருடன் தங்களது நிறுவனத்தின் பெயரை இணைத்துக் கொள்ளலாம்.
  • மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருவாயை கணிசமாக அதிகரிக்க உதவுகின்றன.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது வருமானத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்காக மெட்ரோ ரெயில் நிலையத்தின் பெயருடன், தனியார் நிறுவனங்கள் தங்கள் பெயரை இணைத்து கொள்ளும் உரிமையை வழங்கி உள்ளது.

இதன்படி இந்த உரிமையை பெற்ற நிறுவனங்கள், மெட்ரோ ரெயில் நிலையத்தின் பெயருடன் தங்களது நிறுவனத்தின் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதாவது மெட்ரோ ரெயில் நிலைய பெயரின் முன்னோ அல்லது பின்னோ தனியார் நிறுவனங்கள் தங்கள் பெயரை இணைக்கலாம்.

மேலும் ரெயில் நிலையத்தின் வெளிப்புறம் தங்கள் விருப்பப்படி புதிய வண்ணங்களை அடித்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க இந்த புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை பல மெட்ரோ ரெயில் நிலையங்களில் தங்கள் நிறுவன பெயரை இணைப்பதற்கான உரிமையை தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன.

கீழ்ப்பாக்கம், நந்தனம், ஏஜி-டி.எம்.எஸ்., அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், திருமங்கலம், ஐகோர்ட்டு, அண்ணா நகர் டவர், கிண்டி, ஆயிரம் விளக்கு ஆகிய ரெயில் நிலையங்களில் தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைக்கும் உரிமையை தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. அதிக நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால் மேலும் பல ரெயில் நிலையங்கள் விரைவில் இந்த பட்டியலில் சேரும். இவை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருவாயை கணிசமாக அதிகரிக்க உதவுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News