தமிழ்நாடு

எழில்குமார் அமலனும் ரினாவதிராஸ்மனும் காதலித்த போது எடுத்துக் கொண்ட படம்


வெளிநாட்டு பெண்ணை 11 வருடங்களாக காதலித்து கரம்பிடித்த குமரி மீனவ வாலிபர்

Published On 2022-06-27 07:07 GMT   |   Update On 2022-06-27 07:07 GMT
  • எனது சொந்த ஊர் கன்னியாகுமரி. எனது பெற்றோரான அமலன்-தமிழ்செல்வி தம்பதியினருக்கு நான் 3-வது மகன்.
  • இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த நான் சிறு வயதாக இருக்கும் போதே எனது தந்தை சார்மன்சினகா இறந்துவிட்டார்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி ராஜசங்கீததெருவைச் சேர்ந்தவர் எழில்குமார் அமலன் (வயது33).

இவர் ஓட்டல் மேனேஜ் மெண்ட் படித்து முடித்து விட்டு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே ஓட்டலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ரினாவதி ராஸ்மன் (வயது31) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் அடிக்கடி பேசி பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 11 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைய விரும்பினர்.

இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்ததும் இருவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று காலை எழில்குமார் அமலன்-ரினாவதி ராஸ்மன் திருமணம் நடந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் 2 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து மணமகன் எழில்குமார் அமலன் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் கன்னியாகுமரி. எனது பெற்றோரான அமலன்-தமிழ்செல்வி தம்பதியினருக்கு நான் 3-வது மகன். 2 அக்காள், ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர். மீனவ சமூகத்தைச் சேர்ந்த நான் கடலில்மீன்பிடிக்கும் தொழிலுக்குச் செல்லாமல் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்த நான், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாய் நட்சத்திர ஓட்டலில் மேலாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இந்தோனேசியா வைச்சேர்ந்த ரினாவதி ராஸ்மனும் வேலைபார்த்து வந்தார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த11 வருடங்களாக காதலித்த நிலையில் எனது சொந்த ஊரான கன்னியாகுமரியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தேன். இதற்காக காதலி மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் அனைவரது ஆசியுடன் இன்று திருமணம் நடந்து முடிந்தது. இது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

மணமகள் ரினாவதி ராஸ்மன் கூறுகையில்,

இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த நான் சிறு வயதாக இருக்கும் போதே எனது தந்தை சார்மன்சினகா இறந்துவிட்டார். எனக்கு ஒரு அண்ணன், ஒருஅக்காள், ஒரு தங்கை உள்ளனர். தாயார் மினார் மார்பன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தேன் துபாய் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றிய போது எழில்குமார்அமலனுக்கும் எனக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 11 வருடங்களாக மனதாரக் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் இன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்றார்.

Tags:    

Similar News