தமிழ்நாடு

சென்னையில் 33 கோவில்களில் சிறப்பு வழிபாடு-சமபந்தி: அமைச்சர்கள் பங்கேற்பு

Update: 2022-08-15 07:28 GMT
  • சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு சமபந்தி விருந்தும் நடைபெற்றது.
  • தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

சென்னை:

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு சமபந்தி விருந்தும் நடைபெற்றது.

சமபந்தி நடைபெற்ற கோவில்களும் தொடங்கி வைத்த அமைச்சர்கள் பெயர் விபரமும் வருமாறு:-

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டார்.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் அமைச்சர் சா.மு.நாசர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

வடபழனி ஆண்டவர் கோவிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்.

பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்.

மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவிலில் அமைச்சர் ராமச்சந்திரன்.

ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் அமைச்சர் ஆர்.காந்தி.

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

தங்கசாலை ஏகாம்பரேசுவரர் கோவிலில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலில் அமைச்சர் மெய்யநாதன்.

வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் கொறடா கோ.வி.செழியன்.

பெசன்ட்நகர் மகாலட்சுமி கோவிலில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்.

கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலில் அமைச்சர் மதிவேந்தன்.

பூங்காநகர் கந்தசாமி கோவிலில் அமைச்சர் செந்தில்பாலாஜி.

சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எஸ்.ரகுபதி.

அரண்மணைக்காரன் தெரு கச்சாலீசுவரர் கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

தேவராஜ முதலி தெரு சென்ன மல்லீசுவரர் கோவிலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

கோயம்பேடு குறுகாலீசுவரர் கோவிலில் அமைச்சர் கீதாஜீவன்.

கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் அமைச்சர் பி.மூர்த்தி.

மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் கோவிலில் அமைச்சர் சி.வி.கணேசன்.

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சக்கரபாணி.

அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் அமைச்சர் கே.என்.நேரு.

பள்ளியப்பன் தெரு அருணாச்சலேசுவரர் கோவிலில் அமைச்சர் கு.பிச்சாண்டி.

அயன்புரம் பரசுராம லிங்கேஸ்வரர் கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ்.

திருவட்டீஸ்வரன் பேட்டை, திருவட்டீஸ்வரர் கோவிலில் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News