தமிழ்நாடு செய்திகள்

எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பண நாயகத்தின் வெற்றியாகும்- சரஸ்வதி பேட்டி

Published On 2023-02-27 11:34 IST   |   Update On 2023-02-27 11:34:00 IST
  • மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர்.
  • எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும்.

ஈரோடு:

ஈரோடு சி.எஸ்ஐ. பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ. சரஸ்வதி இன்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த இடைத்தேர்தலில் ஏராளமான பணம், பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு புகார்கள் உள்ளன.

எனவே எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது பணநாயகத்தின் வெற்றியாகும். பணத்தை கொடுத்து வாக்காளர்களை கவரும் நிலை மாற்றப்பட வேண்டும். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தான் திருமங்கலம் பார்முலா போல ஈரோடு கிழக்கு பார்முலா உருவாக்கப்பட்டதாக மக்களும் பேசிக் கொள்கின்றனர். மக்களை தேர்தல் பணிமனையில் அடைத்து வைத்து பணம், உணவு விநியோகித்ததாக மக்களே பேசுகின்றனர்.

எனவே வாக்காளர்கள் பணம் வாங்க மறுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க முன்வர வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் பெருமை அடையும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் விரலில் வைக்கப்படும் மையை அழிக்க ஸ்பிரிட் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இக்குறைபாடுகளை எல்லாம் சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News