தமிழ்நாடு

எழும்பூர்- புதுப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள்- வாகன ஓட்டிகள் பாதிப்பு

Published On 2022-08-14 09:07 GMT   |   Update On 2022-08-14 09:07 GMT
  • எழும்பூர்- புதுப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோர பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
  • சென்னை மாநகர பகுதியில் கழிவுநீர் ஆறாக இது ஒடுகிறது.

சென்னை:

எழும்பூர்- புதுப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோர பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னையில் கூவம் ஆறு பல்வேறு பகுதிகள் வழியாக பயணித்து நேப்பியர் பாலம் அருகே வங்ககடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், பருத்திப்பட்டு வரை, கூவம் ஆற்றில் நல்ல நீரோட்டம் உள்ளது. அதன்பிறகு, சென்னை மாநகர பகுதியில் கழிவுநீர் ஆறாக இது ஒடுகிறது.

கூவத்தை ஆக்கிரமித்து குடிசைகள் மட்டுமின்றி, சிமென்ட் கூரை வீடுகள், கான்கிரீட் வீடுகள், சிறிய தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்றும் பணிகள், படிப்படியாக நடந்து வருகின்றன.

திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு குடிசைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன.

எழும்பூர், புதுப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடிசைவீடுகள், கார், டூவீலர் ஒர்க் ஷாப், ஆகியவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் தற்போது எழும்பூர், புதுப்பேட்டை கூவம் கரையோரம், லேங்க்ஸ் கார்டன் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு பழைய கார்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள், நிறுத்தப்பட்டு உள்ளன.

இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு இடை யூறுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மேலும் அப்பகுதியில் கழிவுப்பொருட்கள் சாலையோரம் கொட்டப்பட்டு உள்ளதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.

எனவே இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News