தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள நூதன போஸ்டரை படத்தில் காணலாம்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நூதன போஸ்டர்

Update: 2022-06-28 07:47 GMT
  • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.
  • சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நூதன முறையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

சேலம்:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஒற்றை தலைமை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் பேட்டி நிலவி வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததால் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இதனிடையே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நூதன முறையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், "சூரசம்ஹாரம் ஸ்டார்ட்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி தலையில் கிரீடம், கையில் வேல் இருப்பது போன்று உள்ளது. தொடர் போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருவதால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News