தமிழ்நாடு

11-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்- பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி

Published On 2022-06-26 06:58 GMT   |   Update On 2022-06-26 06:59 GMT
  • அ.தி.மு.க.வை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழிநடத்த முடியாது.
  • ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஏற்பட்ட களேபரத்திற்கு பிறகு, மக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி அ.தி.மு.க.விற்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். இது தன்னெழுச்சியாக ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழிநடத்த முடியாது. கட்சி தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும். மேலும் ஜூலை 11 -ந் தேதி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்.

அ.தி.மு.க. எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல. அனைவருக்கும் பொதுவான ஜனரஞ்சகமான கட்சி தான் அ.தி.மு.க., பொதுக்குழு நடக்கலாமா? இல்லையா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை நடத்தலாம் .

ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம். ஆனால் கட்சியின் தொண்டர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஆதரவாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News