தமிழ்நாடு

சென்னையில் ஒரே வாரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 33 பேர் கைது

Update: 2022-10-03 09:10 GMT
  • குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது பற்றி கடந்த 25-ந்தேதி முதல் ஒருவாரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
  • பெண்ணிடம் 72 கிராம் கொகைன் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.

சென்னை:

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது பற்றி கடந்த 25-ந்தேதி முதல் ஒருவாரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது 12½ கிலோ குட்கா 19 கிலோ மாவா ஆகிய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.13 ஆயிரம் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதிகபட்சமாக ஆர்.கே.நகர் போலீஸ் நிலைய எல்லைக்குள் 15.5 கிலோ மாவா கைப்பற்றப்பட்டது. ராபர்ட் (54), நந்தா (43) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கானாத்தூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது ஒரு பெண்ணை பிடித்து சோதனை போட்டனர். அந்த பெண்ணிடம் 72 கிராம் கொகைன் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.

இதன் மதிப்பு ரூ.5.75 லட்சம் ஆகும். மேலும் அந்த பெண்ணிடம் ரூ.2.6 லட்சம் ரொக்கப்பணம் ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். அந்த பெண்ணின் பெயர் அன்யனிமோனிகா. நைஜீரியாவை சேர்ந்தவர்.

Similar News