தமிழ்நாடு

சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும்- அதிகாரிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

Update: 2022-09-29 09:01 GMT
  • தமிழ்நாட்டில் தேசிய மாநில நெடுஞ்சாலை பாலங்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன.
  • சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் தமிழக அரசு, தமிழக அரசுத் துறைகள், தொடர் வண்டித்துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக அழித்து விட்டு, அந்த இடங்களை அழகுபடுத்த வேண்டும்.

சென்னை:

அரசு செயலாளர்கள், ரெயில்வே, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தேசிய மாநில நெடுஞ்சாலை பாலங்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறைகளுக்கு சொந்தமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த சுவர் விளம்பரங்கள் அனைத்தையும் தமிழக அரசு, தமிழக அரசுத் துறைகள், தொடர் வண்டித்துறை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக அழித்து விட்டு, அந்த இடங்களை அழகுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், பொது இடங்களைக் கெடுக்கும் விளம்பரங்களை அகற்ற நீதிமன்றங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News