தமிழ்நாடு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்- டி.ஜி.பி. ஆபீசில் புகார்

Update: 2022-06-25 07:48 GMT
  • சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
  • செல்போன் மற்றும் வாட்ஸ் அப் வழியாக மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று அளித்த பேட்டியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றச் சாட்டுகளை தெரிவித்தார்.

இந்த நிலையில் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் வாட்ஸ் அப் வழியாக மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News