தமிழ்நாடு

நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?

Published On 2022-08-17 11:28 GMT   |   Update On 2022-08-17 11:37 GMT
  • கவர்னர் ஆர்.என்.ரவி-ரஜினி சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விக்குறி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது.
  • ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த சூட்டோடு சூடாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி "பளீர்" என கூறியதும் விவாதமாகி இருக்கிறது.

உண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி-ரஜினி சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விக்குறி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். அந்த இலக்கின் ஒரு பகுதிதான் கவர்னர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள். ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது.

பிரதமர் மோடி, ரஜினியை விரும்புவதாகவும், உள்துறை மந்திரி அமித்ஷா விரும்பவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும் என்று கூட நினைக்கிறார்களாம்.

இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்களாம். தற்போது சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக சமீபத்தில் ஒரு வார இதழில் தகவல் வெளியாகி இருந்தது. டெல்லி வட்டாரத்தில் இது உறுதி செய்யப்படுகிறது.

தமிழக அரசியலைப் பொருத்தவரை ரஜினிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லை. ஆதரிக்கும் மன நிலையில் இருந்த நடுநிலை மக்களும் இப்போது ரஜினியை கண்டு கொள்வதில்லை. என்றாலும் ரஜினியை முன்நிறுத்தி ஏதோ ஒரு அலையை உருவாக்க பாரதிய ஜனதாவில் சில மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்.

Tags:    

Similar News