தமிழ்நாடு

2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. அணிகள் இணையும்- சசிகலா ஆரூடம்

Published On 2022-10-02 04:50 GMT   |   Update On 2022-10-02 04:50 GMT
  • தொண்டர்களை பொறுத்தவரை கட்சி ஒன்றாக வேண்டும்.
  • நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதனைத்தான் தொண்டர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

சென்னை:

சசிகலா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த எல்லோரும் ஒன்று என்றே நான் நினைக்கின்றேன். அதனால்தான் நான் யாரையும் பிரித்து பார்க்கவில்லை.

என்னைப் பொறுத்த வரை எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன்.

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதற்குள் எல்லோரும் ஒன்றிணையும் சூழ்நிலை வரும். அது மிக விரைவில் நடக்கும்.

தொண்டர்களை பொறுத்தவரை கட்சி ஒன்றாக வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும், எண்ணத்துடனும் தான் இருக்கிறார்கள்.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதனைத்தான் தொண்டர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடத்திய பொதுக் குழு தொடர்பாகத்தான்.

ஆனால் நான் போட்ட வழக்கு ஆரம்ப காலத்திலேயே போடப்பட்டது. அந்த வழக்கு வருகிற 26-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News