தமிழ்நாடு

திருவல்லிக்கேனி பகுதியில் குட்கா-போதை மாத்திரைகளை விற்பனை செய்த 57 பேர் கைது

Update: 2022-10-07 05:55 GMT
  • போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
  • குட்கா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 57 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை:

சென்னை மாநகரில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்து துணை கமிஷனர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களில் போதைப் பொருட்களை ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் திருவல்லிக்கேனி பகுதியில் கடந்த 45 நாட்களாக போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில் குட்கா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 57 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 1½ மாதத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து 34 கிலோ கஞ்சா, 44 கிலோ குட்கா மற்றும் போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள், செல்போன்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருட்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Similar News