தமிழ்நாடு
 சாமியார் பாஸ்காரானந்தா.

ஆசிரமத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாமியார் போலீசில் புகார்

Published On 2022-10-07 06:35 GMT   |   Update On 2022-10-07 06:35 GMT
  • பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது தொடர்பாக பாஸ்கர் ஆனந்தா பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
  • ஆன்மீகவாதியை ரோட்டில் நிற்க வைத்து அழ வைக்காதீர்கள் என அழுதபடி பேசினார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் கோவையைச் சேர்ந்த பாஸ்கரானந்தா என்பவர் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார். பார்ப்பதற்கு நித்தியானந்தா போல் உருவம் கொண்ட இவர் செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று ஆசிரமத்தை அமைத்திருந்த நிலையில் செல்வகுமார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என வேறு ஒருவருக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது இது தொடர்பாக பாஸ்கர் ஆனந்தா பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். முறையான நீதிமன்ற உத்தரவுகள் இன்றி ஆசிரமத்தை இடித்தது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக விசாரணைக்கு வந்த பாஸ்கரானந்தா இரண்டு பேருந்துகளில் பக்தர்களை அழைத்து வந்ததால் பல்லடம் காவல் நிலையம் முன்பு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனையடுத்து பாஸ்கரானந்தாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார் எதற்காக அனுமதி இன்றி கூட்டம் கூட்டி பரபரப்பை ஏற்படுத்துகிறீர்கள் என கேட்டபோது பக்தர்களாக வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது வாழ்வாதாரம் பறிபோய் விட்டதாகவும் நீதிமன்ற ஆணைகள் எதுவும் இல்லாமல் தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்பொழுது கூட்டக்கூடாது என போலீசார் எச்சரித்ததால் கலங்கிப்போன சாமியார் திருவோடு வாங்கித் தாருங்கள் நான் பிச்சை எடுக்கிறேன். ஆன்மீகவாதியை ரோட்டில் நிற்க வைத்து அழ வைக்காதீர்கள் என அழுதபடி பேசினார். இதனால் சுற்றி இருந்த பக்தர்கள் கலக்கமடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவரையும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News