தமிழ்நாடு

ஓ பன்னீர்செல்வம்

தொண்டர்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள்- ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

Update: 2022-08-10 09:37 GMT
  • கோர்ட்டு வழக்குகளை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
  • நீங்கள் உங்கள் பகுதியில் சென்று கட்சி வேலையில் தீவிரமாக ஈடுபடுங்கள்.

சென்னை:

சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.

அ.தி.மு.க. தொண்டர் அனைவரும் நம் பக்கமே இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் பகுதியில் சென்று கட்சி வேலையில் தீவிரமாக ஈடுபடுங்கள்.

கோர்ட்டு வழக்குகளை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வழக்கின் தீர்ப்புகள் நமக்கு சாதகமாகவே வரும். எனவே எதிர்காலத்தை பற்றிய அச்சம் உங்களுக்கு தேவையில்லை என்றார்.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் இருந்தும் நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்களிடம் அந்த பகுதியின் நிலவரங்கள் பற்றி கேட்டறிந்தார்.

சுமார் 3.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி களிடம் தனித்தனியாகவும் கருத்துக்கள் கேட்டார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த நிர்வாகிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்களிடம் கேட்டபோது, நிர்வாகிகள் மட்டுமே கட்சி இல்லை. தொண்டர்கள் ஆதரவு யாருக்கு என்பதை பார்க்க வேண்டும். எல்லாம் சில நாட்களில் சீராகும். எல்லோரும் ஓ.பி.எஸ். தலைமையில் அணிவகுப்பார்கள் என்றார்கள் நம்பிக்கையுடன்.

Tags:    

Similar News