தமிழ்நாடு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Published On 2022-09-30 11:55 GMT   |   Update On 2022-09-30 11:55 GMT
  • கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடந்து வருகிறது.
  • சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக் உள்ளிட்டோரிடம் தனிப்படை விசாரணை நடத்தியது

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்தது. எஸ்டேட் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு தனிப்படையினரும் பிரிந்து சென்று பலரிடம் விசாரணை நடத்தினர்.

முக்கிய குற்றவாளியான சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சம்சீர் அலி, மனோஜ்சாமி மற்றும் அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதனால் வழக்கு விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News