தமிழ்நாடு

வேலைக்காரியாக பணியில் சேர்ந்து 100 வீடுகளில் நகைகளை கொள்ளையடித்த பெண்

Published On 2022-08-18 07:45 GMT   |   Update On 2022-08-18 07:45 GMT
  • டெல்லி, ஜோத்பூர், கொல்கத்தா, காசியாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் வீட்டு வேலைக்காக சென்று நகைகளை திருடி விட்டு தப்பியுள்ளார்.
  • காஜல் தனது கூட்டாளியான பன்டி என்பவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை:

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காஜல் என்கிற பூனம்ஷா. இவர் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த விபுல் கோயல் என்பவரின் வீட்டில் வேலையாளியாக பணியாற்றினார். அப்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி விட்டு தப்பினார்.

அவரை போலீசார் கைது செய்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் காஜல், சுமார் 100 வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

டெல்லி, ஜோத்பூர், கொல்கத்தா, காசியாபாத் உள்பட பல்வேறு நகரங்களில் வீட்டு வேலைக்காக சென்று நகைகளை திருடி விட்டு தப்பியுள்ளார்.

காஜல் தனது கூட்டாளியான பன்டி என்பவருடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார். காசியாபாத்தில் விபுல் கோயல் வீட்டில் வேலைக்கு சேருவதற்கு முன்பு காஜல் டெல்லி உத்தம் நகரில் வசித்து வந்துள்ளார். திருடிய நகைகளை விற்று அந்த பணத்தில் டெல்லியில் ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். திருட்டில் ஈடுபட மற்ற நகரங்களுக்கு காஜல் விமானத்தில் பயணம் செய்து உள்ளார்.

காஜல், திருடிய நகைகள் மூலம் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருட்டு நகைகளை வாங்கிய கூட்டாளி பன்டி மற்றும் நகைக்கடைக்காரர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News