தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை- கோவை செல்வராஜ் பேட்டி

Update: 2022-07-06 06:20 GMT
  • 11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுக்குழு கூட்டமே இல்லை
  • ஓ.பன்னீர் செல்வத்தை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேட்டி அளித்த போது, ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 'கட்சி விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுப்பார்கள்' என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

11-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுக்குழு கூட்டமே இல்லை. அது எடப்பாடி பழனிசாமிக்கு துதிபாடும் கூட்டம். ஓ.பன்னீர் செல்வத்தை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை.

அவர் அளவோடு பேச வேண்டும். இல்லை என்றால் அவர் மீதுள்ள பழைய வழக்குகளை எல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வைப்போம். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை.

ஜெயலலிதா 21 ஆண்டுகள் இருந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. 2 மாதம் கூட ஆகாத நிலையில் எப்படி இந்த பதவியை நீக்க முடியும். எடப்பாடி பழனிசாமி என்ன கட்சியின் நிறுவன தலைவரா? எனவே ஓ.பன்னீர்செல்வத்தை யாராலும் நீக்க முடியாது.

இவ்வாறு கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.

Tags:    

Similar News