தமிழ்நாடு

மணக்கோலத்தில் சிலம்பம் ஆடிய புதுமாப்பிள்ளை

Published On 2022-06-29 03:17 GMT   |   Update On 2022-06-29 03:17 GMT
  • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது மணக்கோலத்தில் சிலம்பம் ஆடினேன்.
  • பல்வேறு ஊர்களுக்கு சென்று மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறேன்.

திருநெல்வேலி:

நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் உணவகம் நடத்தி வரும் பழனி-கோமதி தம்பதியரின் மகன் சங்கரநாதன். சிலம்ப கலைஞர். இவருக்கும், நெல்லை டவுனை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் பொன்னாக்குடி அய்யா வைகுண்டர் பதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து வெளியே வந்த புதுமாப்பிள்ளை சங்கரநாதன் மணக்கோலத்தில் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் ஆடி அசத்தினார். அதை பார்த்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதுகுறித்து சங்கரநாதன் கூறுகையில், 'சிலம்பம் என்பது நமது பாரம்பரிய தற்காப்பு கலை. சிறப்புமிக்க இந்த கலை அழிந்து விடக்கூடாது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது மணக்கோலத்தில் சிலம்பம் ஆடினேன். மேலும் சிலம்ப கலையை பிரபலப்படுத்தும் நோக்கத்திலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இதை செய்தேன்.

நான் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன். பல்வேறு ஊர்களுக்கு சென்று மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறேன்' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News