தமிழ்நாடு

சங்ககிரி அருகே மங்கமலையார் கோவிலில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, தனது மகன் மிதுனுடன் சாமி தரிசனம் செய்தார்.

மங்கமலையார் பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி குடும்பத்துடன் சாமி தரிசனம்

Update: 2022-10-07 05:36 GMT
  • வருடம்தோறும் புரட்டாசி மாதத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா தனது குடும்பத்தாருடன் வந்து பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
  • தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, தனது மகன் மிதுனுடன் மங்கமலையார் பெருமாள் கோவிலுக்கு வந்தார்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனுார் ஊராட்சியில், மங்கமலையார் பெருமாள் கோவில் உள்ளது. அங்கு வருடம்தோறும் புரட்டாசி மாதத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா தனது குடும்பத்தாருடன் வந்து பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி நடப்பாண்டு புரட்டாசி மாதம் 3-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, தனது மகன் மிதுனுடன் நேற்று மங்கமலையார் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவருடன் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான வெங்கடாஜலம், சங்ககிரி எம்.எல்.ஏ. சுந்தரராஜன், ஒன்றிய செயலாளர் ரத்தினம், படைவீடு முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெகநாதன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சிவக்குமாரன், ஒன்றிய துணை செயலாளர் மருதாசலம், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாணவரணி ஒன்றிய செயலாளர் சரவணன், துணை செயலாளர் வினோஜ், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வேபிரிட்ஜ்ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் குமார் ஆகியோரும் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து, கோவிலை சுற்றி வலம் வந்து, திருகோடி விளக்கு ஏற்றி, அங்கிருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

Tags:    

Similar News