தமிழ்நாடு

சோழவந்தான் அருகே கஞ்சா வைத்திருந்த கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கைது

Update: 2022-10-07 04:34 GMT
  • சோழவந்தான் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் கருப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
  • சோழவந்தான் போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையிலான போலீசார் கருப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ஒரு வாலிபர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர் கருப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது32) என்பது தெரிய வந்தது. கஞ்சா மற்றும் மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, சோழவந்தான் போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர்.

இவர் கருப்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் துணைத்லைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News