தமிழ்நாடு

(கோப்பு படம்)

வெளிநாடு செல்வோர் காவல்துறை சான்றை எளிதாக பெற மத்திய அரசு நடவடிக்கை

Published On 2022-09-26 20:00 GMT   |   Update On 2022-09-26 20:00 GMT
  • அஞ்சல் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.
  • நாளை முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வோர் பாஸ்போர்ட் பெற, காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்த பட்டுள்ளதாக சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வெளிநாடு செல்லும் இந்திய குடிமக்களுக்கு உதவும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை அஞ்சல் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும். வரும் நாளை முதல் (28ந் தேதி முதல்) இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

எனினும், அஞ்சல் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களில் வர உள்ள இந்த வசதி விண்ணப்பதாரர்களுக்கு வெளிநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு உத்தரவாதம் தராது. காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று குறித்த பிரச்சினைகளை தீர்க்க மட்டுமே உதவும். இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News