தமிழ்நாடு

ஓ.பன்னீர் செல்வம் 

அதிமுக பொதுக்குழு விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல்

Update: 2022-06-27 19:34 GMT
  • தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை தாக்கல்.
  • அதிமுக ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாக தகவல்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாகவும், இன்றுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம் தான் என்றும், அதில் மாற்றம் இல்லை என்றும், கூறியுள்ளார்.

தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட விதிகளின் கடந்த பொதுக்குழு நடந்ததா இல்லையா மற்றும் கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News