தமிழ்நாடு

பொதுக்குழு கூட்டம் 11-ந் தேதி நடைபெற வாய்ப்பு இல்லை: வைத்திலிங்கம் ஆவேசம்

Published On 2022-07-03 10:23 GMT   |   Update On 2022-07-03 10:23 GMT
  • தலைமை கழகம் அறிவிப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் கொடுத்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாது.
  • எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சர்வாதிகார மனநிலையோடு செயல்படுகின்றனர்.

தஞ்சாவூர்:

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அழைப்பிதழ் அடித்து கொடுத்து வருகின்றனர். தலைமை கழகம் அறிவிப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் கொடுத்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாது.

பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இன்றி இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பது கண்டிக்கத்தக்கது. 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சர்வாதிகார மனநிலையோடு செயல்படுகின்றனர்.

பொருளாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் சின்னமும், கட்சியை வழிநடத்த அதிகாரமும் உள்ளது.

இவ்வாறு அவர் ஆவேசத்துடன் கூறினார்.

Tags:    

Similar News