தமிழ்நாடு

ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 66 லட்சம் பேர் பயணம்

Published On 2023-02-01 05:58 GMT   |   Update On 2023-02-01 05:58 GMT
  • மெட்ரோ ரெயிலில் அதிகபட்சமாக 13-ந் தேதி அன்று 2 லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் பயணம் செய்தனர்.
  • பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்கி வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பு வசதியையும் அளிப்பதாக சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13-ந் தேதி அன்று 2 லட்சத்து 65 ஆயிரத்து 847 பேர் பயணம் செய்தனர்.

டிசம்பர் மாதத்தை விட ஜனவரியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் அதிகமாக பயணம் செய்து உள்ளனர். சென்னை மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்கி வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பு வசதியையும் அளிப்பதாக தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News