தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Published On 2022-10-05 08:26 GMT   |   Update On 2022-10-05 08:26 GMT
  • அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
  • ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை வந்த காரணத்தால் விண்ணப்பிக்க அவகாசம் 6-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 20 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ இடங்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது.

மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க 3-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை வந்த காரணத்தால் விண்ணப்பிக்க அவகாசம் 6-ந்தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

3-ந்தேதி மாலை நிலவரப்படி 39,272 பேர் பதிவு செய்தனர். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவர்களின் எண்ணிக்கை 34,966 ஆகும்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,529 பேர் பதிவு செய்துள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,743 பேர் பதிவு செய்தனர். மாற்றுத்திறனாளிகள் 83 பேரும், முன்னாள் படை வீரர் வாரிசுகள் 345 பேரும், விளையாட்டு பிரிவு மாணவர்கள் 297 பேரும் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துச்செல்வன் தெரிவித்தார்.

2 நாட்களில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி இருக்கும். நாளை மாலை வரை அவகாசம் இருப்பதால் மேலும் சிலர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 5050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 125 இடங்கள் கிடைக்கின்றன. மேலும் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 3050 பெறப்படுகிறது. மொத்தம் 8225 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் 848 போக மீதமுள்ள 7,377 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதில் 1,290 எம்.பி.பி.எஸ். இடங்கள் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும்.

தமிழகத்தில் பி.டி.எஸ். அரசு பல் மருத்துவ கல்லூரி மூலம் கிடைக்கும் 200 இடங்களில் 15 சதவீதம் (30 இடங்கள்) அகில இந்திய ஒதுக்கீட்டில் செல்கிறது. மீதமுள்ள 170 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 1960 இடங்களும் உள்ளன.

Tags:    

Similar News