தமிழ்நாடு
சென்னையில் பொதுமக்களை கவரும் 2 ரூபாய் கோன் ஐஸ்கிரீம்

சென்னையில் பொதுமக்களை கவரும் 2 ரூபாய் கோன் ஐஸ்கிரீம்

Published On 2022-05-27 08:31 GMT   |   Update On 2022-05-27 08:31 GMT
சென்னையில் 2 ரூபாய் ஐஸ்கிரீம் வாங்க கடை முன் கூட்ட நெரிசல் ஏற்படத் தொடங்கியதால் விற்பனையை விரைவுபடுத்த வங்கியைப் போல டோக்கன் சிஸ்டம் முறை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை:

சென்னை மேற்கு மாம்பலத்தில் 2 ரூபாய்க்கு விற்கப்படும் கோன் ஐஸ்கிரீம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

மேற்கு மாம்பலம் தம்பையாரெட்டி தெருவில் “வினுவின் இக்லூ” என்ற பெயரில் ஐஸ்கிரீம் கடை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கோடை வெயிலுக்கு இதமாக விற்பனை செய்யப்படும்

2 ரூபாய் கோன் ஐஸ்கிரீம் வாங்க தினமும் மக்கள் கூட்டம் திரண்டு வருகிறது. கடந்த 95-ம் ஆண்டு தொடக்கத்தில் வாடிக்கையாளரை கவர ரூ.1-க்கு கோன்ஐஸ்கிரீம் விற்கப்பட்டது. அதன் பிறகு 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

2008- ம் ஆண்டு வரை அதே விலையில் விற்பனை தொடர்ந்தது.அதன்பின் கடை மூடப்பட்டது.

தற்போது மீண்டும் கடை புதுப்பித்து திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அதே 2 ரூபாய்க்கு கோன் ஐஸ்கிரீம் விற்பனை தொடருகிறது.

வெண்ணிலா, ஸ்ட்ராபெரி, மாம்பழம் மற்றும் பிஸ்தா உள்ளிட்ட சுவைகளுடன் ரூ.2 விலையில் கோன் ஐஸ்கிரீம் கிடைக்கிறது.

வாடிக்கையாளர்கள் ரூ.2 பணம் செலுத்தி டோக்கன் பெற்று ஐஸ்கிரீமை சுவைக்கலாம்.

இது குறித்து கடை உரிமையாளர் வினோத் கூறியதா வது:-

2 ரூபாய் ஐஸ்கிரீம் வாங்க கடை முன் கூட்ட நெரிசல் ஏற்படத் தொடங்கியதால் விற்பனையை விரைவுபடுத்த வங்கியைப் போல டோக்கன் சிஸ்டம் முறை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஒரு இயந்திரம் மூலம் எண் அறிவிக்கப்படுகிறது, அதன் பிறகு ஐஸ்கிரீமை வாங்கி செல்லலாம் “எங்கள் தயாரிப்புகளைப் பற்றி விசாரிப்பதற்காக தொலைதூர இடங்களில் இருந்து போன் அழைப்புகள் வருகின்றன. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நாங்கள் ஒரு பில் கொடுக்கிறோம்.

ஐஸ்கிரீம் தயாரிக்க சுத்தமான பால் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News