தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-05-27 03:40 GMT   |   Update On 2022-05-27 03:40 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 8 ஆயிரத்து 454 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 8 ஆயிரத்து 58 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கலில் நேற்று மாலை 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்தும், குடும்பத்துடன் படகு சவாரியும் சென்று வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு நேராக வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 8 ஆயிரத்து 454 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 8 ஆயிரத்து 58 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று மாலை முதல் இந்த தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலையும் காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய வாய்ப்புள்ளது.

நேற்று 118.09 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 118.11 அடியானது.
Tags:    

Similar News