தமிழ்நாடு
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

புரசைவாக்கம்-அசோக்நகரில் நெரிசலை குறைக்க 10 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

Published On 2022-05-22 09:36 GMT   |   Update On 2022-05-22 09:36 GMT
ஈவேரா சாலை சந்திப்பு மற்றும் நாயர் பாலம் சந்திப்பில் இருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக வாகனங்கள் செல்ல இயலவில்லை.

சென்னை:

சென்னை அசோக்நகர் காசி தியேட்டர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இன்று முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பிள்ளையார் கோயில் தெரு எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி செல்ல விரும்பும் வாகனங்கள் காசி தியேட்டர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுமார் 150 மீட்டருக்கு சென்று கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் யூ திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி வாகனங்கள் சென்றன.

பிள்ளையார் கோயில் தெரு மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து வந்த வாகனங்கள் கனரக வாகனங்கள் தவிர கே.கே.நகர் வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் காசி தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பிச் சுமார் 160 மீட்டருக்கு சென்று காசி மேம்பாலம் அடியில் யூ திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடைந்தன.

அசோக் நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகர், வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தமன் கோவில் தெரு வழியாக அசோக் நகர் 11வது அவென்யூக்கு சென்றன.

வேப்பேரி- ஈ.வே.ரா.சாலையில் உள்ள தாசபிரகாஷ் சந்திப்பில் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையில், தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணா சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி ஈவேரா சாலை சந்திப்பு மற்றும் நாயர் பாலம் சந்திப்பில் இருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக வாகனங்கள் செல்ல இயலவில்லை.

புரசைவாக்கத்தில் இருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி ராஜா அண்ணாமலை சாலை வழியாக செல்லவில்லை.

அத்தகைய வாகனங்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி டாக்டர் நாயர் பாயிண்ட் சந்திப்பில் நேராகவோ, வலது மற்றும் இடது புறமாக திரும்பி சென்றன.

போக்குவரத்து மாற்றங்களை இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு முன்நின்று செய்திருந்தார். இந்த மாற்றம் 10 நாட்கள் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று சேத்துப்பட்டு சந்திப்பில் மாலை நேரங்களில் நெரிசல் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் ஹாரிங்டன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் நேராக மற்றும் வலது புறமாக திரும்புவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரையில், ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள். சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும்வலது புறம் திரும்ப அனுமதி இல்லை.

அத்தகைய வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மெக்கானிக்கல் சாலை. டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை மற்றும் மெக்கனிக்கல் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பிற்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News