தமிழ்நாடு
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை நிலவரப்படி 226 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் அருவியை தொலைவில் இருந்து பார்வையிட மட்டும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.