தமிழ்நாடு
மழை, வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

Update: 2022-05-19 01:10 GMT
சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. 

அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை ,திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை ) முதல் 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

Similar News