தமிழ்நாடு
கோப்புபடம்

கோவையில் சூப்பர்வைசருக்கு பிளேடு வெட்டு

Update: 2022-05-17 09:43 GMT
போலீசார் தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை:

சேலம் மாவட்டம் கொளத்தூர் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை( வயது 28). 
 
இவர் கோவை பீளமேடு வி.கே ரோட்டில் உள்ள தனியார் கம்பெனி வளாகத்தில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார். 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜதுரை மது குடித்து விட்டு தனது அறையில் இருந்தர். அப்போது கம்பெனி சூப்பர் வைசர் சவுந்தரராஜன்(52) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு ராஜதுரையை வேலைக்கு அழைத்துள்ளார். 

ஆனால் அவர் வேலைக்கு செல்லவில்லை. மறுநாள் காலையில் ராஜதுரை வேலைக்கு சென்றார். அப்போது சூப்பர்வைசர் சவுந்தராஜன், ராஜதுரையை நிறுவன இயக்குனரிடம் அழைத்து சென்று வேலையை விட்டு நிறுத்திவிடுமாறு பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை தகாத வார்த்தைகளால் திட்டி சவுந்தரராஜனை பிளேடால் வெட்டியுள்ளார். 

இதில் அவருக்கு காது, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. 

இதனை ப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு சேரன்மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News