தமிழ்நாடு
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

Published On 2022-05-17 01:06 GMT   |   Update On 2022-05-17 01:06 GMT
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை:

வடதமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல்நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் அனேக இடங்களில் இன்றும், நாளையும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது-

நீலகிரி, கோவை , திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை , பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

19, 20-ந்தேதிகளிலும் தமிழகம்-புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

19, 20-ந்தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். 

எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Tags:    

Similar News