தமிழ்நாடு
முதல்வர் மு.க ஸ்டாலின்

‘பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துக’ - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

Update: 2022-05-16 05:23 GMT
நூல் விலை உயர்வை எதிர்த்து திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தினால் தினம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோட்டில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள், ஜவுளி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.

இந்த கடையடைப்பு காரனமாக நாளொன்றுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் தமிழக ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tags:    

Similar News