தமிழ்நாடு
மழை, வானிலை ஆய்வு மையம்

தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2022-05-02 21:21 GMT   |   Update On 2022-05-02 21:21 GMT
வெப்பசலனம் காரணமாக தமிழக உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழக தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 6-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சோழவந்தானில் 6 சென்டி மீட்டரும், பெள்ளாட்சியில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News