தமிழ்நாடு
.

குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பள்ளிகள் பட்டியல் வெளியீடு

Update: 2022-04-17 11:07 GMT
சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பள்ளிகள் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
சேலம்: 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப்பிரிவு 12(1)(சி) ன்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை நுழைவுநிலை வகுப்பில் அதாவது எல்.கே.ஜி., முதல் வகுப்பில் சேர்க்கை மற்றும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

2017-18ம் ஆண்டு முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. வருகிற கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வி துறை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்   உள்ள தனியார் சுய நிதி பள்ளிகள்  மற்றும் அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா? மற்றும் அங்கு எல்.கே.ஜி., 1ம் வகுப்பில் எத்தனை இடங்கள் உள்ளன? என்பன போன்ற விபரங்கள் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தனியார் சுயநிதி பள்ளிகள்  எவை? எவை? என்பது குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 355 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் நுழைவு வகுப்பு எல்.கே.ஜி. என்று போடப்பட்டிருக்கிறது. 1ம் வகுப்பு இடம்பெறவில்லை.

2019-20-ம் கல்வியாண்டில் ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 4,748 பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட்ட 1,65,445 மாணவர்களுக்கு ரூ.109.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News