தமிழ்நாடு
முல்லைப் பெரியாறு அணை

தொடரும் கனமழை- முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

Published On 2022-04-12 04:33 GMT   |   Update On 2022-04-12 04:33 GMT
நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கூடலூர்:

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், கேரளாவில் ஒரு சில மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு 125 அடிக்கு கீழ் இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. நேற்று அணையின் நீர்மட்டம் 125.75 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 126.50 அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று 850 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1975 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3942 மி.கன அடியாக உள்ளது.

இதே போல வைகை அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது. நீர்வரத்து 276 கன அடியாக உள்ளது.

நேற்று மாலை முதல் மதுரை கள்ளழகர் கோவில் திருவிழாவுக்காக 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி என மொத்தம் 1072 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5421 மி.கன அடியாக உள்ளது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.8 அடியாக உள்ளது. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.

தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று பதிவான மழை அளவு விபரம் வருமாறு:-

பெரியாறு 35, தேக்கடி 44.6, கூடலூர் 87, உத்தமபாளையம் 9, வைகை அணை 3.8, வீரபாண்டி 29, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 27, பெரியகுளம் 86, போடிநாயக்கனூர் 25.2, அரண்மனைபுதூர் 43.2, ஆண்டிபட்டி 30.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News