தமிழ்நாடு
பல்லடம் பகுதியில் உள்ள கடையில் அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி

திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை- தடை செய்யப்பட்ட 27 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-04-10 04:55 GMT   |   Update On 2022-04-10 04:55 GMT
காலாவதியான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் என 4.5 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், காலா வதியான உணவு பொருள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையின் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் அனுப்பிய புகார் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை மற்றும் தின்பண்டம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 4.5 கிலோ காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கி எச்சரித்தனர்.

பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 4கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் 27.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு, தலா 5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் என 4.5 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 

Tags:    

Similar News