தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 785 கன அடியாக சரிவு

Published On 2022-04-09 04:00 GMT   |   Update On 2022-04-09 04:17 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 1098 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 785 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 1,500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 105.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்றும் மேலும் சரிந்து 105.04 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News