மேட்டூர் அணைக்கு இன்று நீர் வரத்து 827 அடியாக அதிகரித்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 827 கன அடியாக அதிகரிப்பு
பதிவு: ஜனவரி 25, 2022 16:19 IST
.
மேட்டூர்:
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று லேசான மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 815 கன அடியிலிருந்து 827 கன அடியாக அதிகரித்துள்ளது.
அனையில் இருந்துகாவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8, 000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் 110. 35 அடியிலிருந்து 109. 90 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 78. 26டி. எம். சியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.